கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:
- கரிய நிறம் கொண்ட, பெரிய, பாலூட்டும் விலங்கு ஆகும்.
- யானையின் குட்டியைக் கன்று என்றோ யானைக்குட்டி/குட்டியானை என்றோ அழைப்பர்.
- யானை உரக்க எழுப்பும் ஒலியைப் பிளிறுதல் என்பர்.
- களிறு என்பது ஆண் யானை. பிடி என்பது பெண் யானை.
- உம்பல்
- உவா
- ஓங்கல்
- கரி
- கறையடி
- கள்வன்
- குஞ்சரம்
- கைம்மா
- கைம்மலை
- தும்பி
- புகர்முகம்
- நால்வாய்
- புழைக்கை (பூட்கை)
- பொங்கடி
- வாரணம்
- வழுவை
- வேழம்
- யானை
- வேழம்
- களிறு -ஆண்யானை
- மதகரி - மதம் பிடித்த ஆண் யானை.(திவாகர நிகண்டு)
- பிடி - பெண்யானை
- கரி
- பூழ்
- வாரணம் - புகர்முக வாரணம் (மணிமேகலை. 7, 115)
- அஞ்சனம் - எண்திசை யானைகளுள், மேற்றிசை யானை(சூடாமணி நிகண்டு)
- அஞ்சனை- எண்திசை யானைகளுள், வடதிசைப் பெண் யானை
- அஞ்சனாவதி- எண்திசை யானைகளுள், வடகீழ்த் திசைப் பெண் யானை
- சுப்பிரதீகம் - எண்திசை யானைகளுள்,வடகீழ்த் திசை யானை
- புட்பதந்தம் - எண்திசை யானைகளுள், வட மேற்றிசை யானை. (தக்கயாகப். 118, உரை.)
- வாமனம் - தென்றிசை யானை.(பிங்கல நிகண்டு)
- புண்டரிகம் - எண்திசை யானைகளுள், தென்கீழ்த்திசை யானை. (பிங்கல நிகண்டு)
- அத்தி - (பிங்கல நிகண்டு)
- அத்தினி
- அதவை - போர் யானை
- அரசுவா
- அல்லியன்
- அனுபமை
- ஆம்பல்
- ஆனை
- இபம் - திசையிபச் செவி (கலிங். புதுப். 331).
- இரதி
- இராசகுஞ்சரம் / குஞ்சரம்
- இருள்
- தும்பு(சென்னைப் பேரகரமுதலி)
- வல்விலங்கு
- மாதங்கம்
- உம்பல் - சான்று
- உரலடி - கடுக்கை யுரலடிமீ துற்றானும் (தனிப்பாடல். i, 79, 158)
- கலபம்
- அருமணவன் - அருமணத் தீவின் யானை. (நன். 275, மயிலை.)
- அல்லியன்- தன் குழுவைப் பிரிந்த யானை
- உவா - 60வயதுக்கும் மேற்பட்ட யானை
- எறும்பி/இறும்பு - (திவாகர நிகண்டு)
- ஏந்துகொம்பன் - வளைந்த கொம்பையுடைய யானை
- ஒற்றைக் கொம்பன் - ஒற்றைக் கொம்புள்ள யானை.
- கொம்பன்யானை - பெரிய கொம்புகளுடைய யானை.
- கோட்டுமலை - கொம்புகளுடைய யானை.
- ஐராவணம் = நாகாதிபன் = நான்மருப்பியானை = வெள்ளானை = வெள்ளையானை = அப்பிரமா தங்கம்- இந்திரன் யானை, பட்டத்து யானை. (சீவக சிந்தாமணி. 3046, உரை.)
- கசேந்திரன் - சிறந்த யானை.
- குவலயாபீடம் - கஞ்சன் கண்ணனைக் கொல்லும் படி ஏவின யானை.
- கடாசலம் - கடாசல வீருரி போர்த்தவர் (விநாயகபுராணம். சண்முகர். 3)
- ஒருத்தல் - ஆண்யானையையும் குறிக்கும்.
- ஓங்கல் - யானை. அக. நி.
- கசம் - (கம்பராமாயணம். திருவவ. 22.)
- கடிறு - கடிறுபலதிரி கானதரிடை (திவ். பெரியாழ். 3, 2, 6)
- கயம் - கயந்தனைக் கொன்று (திருவாசகம். 9, 18).
- கரபம் - ஒருநாற் றந்தக் கரபத்தி னண்ணல் (கந்தபுராணம். அச முகிந. 22)
- கராசலம் - கராசலத்தின் வன்றோல் வியன்புயம் போர்த்தாய் (கந்தபுராணம் கந்தவி. 63)
- கரிணி - பெண்யானை(பிங்கல நிகண்டு)
- கருமா -
- கரேணு - (திவாகர நிகண்டு,சூடாமணி நிகண்டு )
- கள்வன் - பிங்கல நிகண்டு
- களபம் - மதகரிக் களபமும் (சிலப்பதிகாரம். 25, 49)
- கறையடி - பொழிமதக் கறையடி (கல்லா. 61, 22)
- கஜம் = கெசம்
- காட்டியானை - காட்டில் வாழும் யானை. (திவாகர நிகண்டு)
- கொலைமலை - கொலைசெய்யும் யானை = போர்கள யானை. பெருமதக் கொலைமலை (கல்லா. 4)
- கிரிசரம் - மலையிற் பிறந்த யானை. (திவாகர நிகண்டு)
- குஞ்சரம் - குஞ்சரவொழுகை பூட்டி (பதிற்றுப்பத்து. 5, பதி.)
- கும்பி - (திவாகர நிகண்டு)
- குமுதம் - தென்மேற்றிசை யானை. (பிங்கல நிகண்டு)
- குழவி - யானைக்கன்று. ஒருசார் விலங்கின் பிள்ளைப்பெயர். (தொல்காப்பியம். பொ. 575--579).
- கைம்மலை - கையை உடைய மலைஅக. நி.
- நடைமலை - நடக்கும் மலையானை. நடைமலை யெயிற்றி னிடைதலை வைத்தும் (கல்லா. 12)
- கைமா - பொலம்படைக் கைம்மாவை (பரிபாடல். 11, 52).
- கோட்டுமா - கோட்டுமா வழங்குங் காட்டக நெறியே (ஐங்குறுநூறு. 282)
- சத்திரி - யானை. (சங். அக.)
- சாகசம் - யானை. அக. நி.
- சாமோற்பவை - பெண் யானை (உரி. நி.)
- சிந்துரம் - (சூடா.)
- சுண்டாலம் - (யாழ். அக.)
- சூகை - அக. நி.
- தந்தாயுதம்
- தந்தாவளம் - தந்தாவளசேனை (பாரத. நான்காம். 9).
- தள்ளுமட்டம் - பெரிய யானைகளால் தள்ளப்பட்டு நடைபயிலும், யானைக்குட்டி.
- தாப்பானை - புதிதாகப் பிடிபட்ட யானையைப் பழக்க, உபயோகப்படுத்தப்படும் பழகிய யானை.
- தொடுவை - புதிய யானையைப் பயிற்றும் யானை
- தாமம் - யானை. (சூடாமணி நிகண்டு)
- திண்டி - அக. நி.
- தீர்க்கமாருதம் - (யாழ். அக.)
- தீர்க்கவத்திரம் - (யாழ். அக.)
- தும்பி - (பிங்கல நிகண்டு.), தும்பியை யரிதொலைத் தென்ன (கம்பராமாயணம். வாலிவதை. 51)
- துருமாரி - (யாழ். அக.)
- துவரிதழ் - அக. நி.
- துவிரதம் - இருகொம் புடைய யானை. (யாழ். அக.)
- தூங்கல் - (திவாகர நிகண்டு)
- தெட்டி - அக. நி.
|
|
- தெள்ளி - அக. நி.
- நகரகாதம் - (யாழ்.நிக)
- நகரசம் - (யாழ்.நிக)
- நதிசரம் - ஆற்றுச்சார்பாகப் பிறந்த யானை.(திவாகர நிகண்டு)
- நாகம் - யானை. காள மேகமு நாகமுந் தெரிகில (கம்பராமாயணம். சித்திர. 2)
- நாகவாரிகம் - அரசர் ஏறுதற்குரிய யானை.
- நிருமதம் - (பிங்கல நிகண்டு) , மதமொழிந்த யானை. (சதுரகராதி)
- நூ - அக. நி.
- நூழில் (சூடாமணி நிகண்டு)
- நெடுங்கை - நெடுங்கைப் பிணத்திடை நின்றான் (பு. வெ. 7, 13).
- பகடு - பைங்கட் பணைத்தாட் பகட்டுழவன் (பு. வெ. 8, 5)
- பஞ்சநகாயுதம்
- பஞ்சநகம்
- பட்டத்தியானை - இராச சின்னங்களுடையதும் அரசன் ஏறுவதற்கு உதவுவதுமான யானை.
- பட்டவர்த்தனம் - அரச யானை. பட்டவர்த்தனமாம் பண்புபெற்ற வெங்களிறு (பெரியபுராணம். எறிபத். 11)
- பண்டி அக. நி.
- பவளக்கொம்பன்
- பிக்கம்= யானைக்கன்று (யாழ். அக.)
- பிணிமுகம்
- பிரளயம்
- பிள்ளுவம்
- பீது - யானைத்திரளின் தலைமைபெற்ற யானை
- புகர்முகம் - புலி யொடு பொரூஉம் புகர்முக வோதையும் (சிலப்பதிகாரம். 25, 29)
- பூட்கை - பொன்றி வீழ்ந்த புரவிவெம் பூட்கை தேர் (கம்பராமாயணம். முதற்போ. 58)
- புழைக்கை - (திவாகர நிகண்டு)
- பூழ்க்கை - பூழ்க்கை முகன் மனுவை நனியெண்ணின் (விநாயகபுராணம். 14, 9).
- பெருங்கை - பெருங்கைத் தொழுதியின் (பதிற்றுப்பற்று. 76, 6).
- பெருமா - (பிங்கல நிகண்டு)
- பென்னை - (சங். அக.)
- பேசகி - (சங். அக.)
- பேசிலம் - (யாழ். அக.)
- பொங்கடி- பொங்கடி படிகயம் (அகநானூறு. 44)
- போதகம் - போதகமொன்று கன்றி (கம்பராமாயணம். விபீடண. 113)
- மகாகாயம் - (யாழ். அக.)
- மகாதந்தம் - (யாழ். அக.)
- மகாநாதம் - (யாழ். அக.)
- மகாமிருகம் - (யாழ். அக.)
- மத்தகுணம் - (யாழ். அக.)
- மதங்கம் - (யாழ். அக.)
- மத்தமா - மத்தம் பிணித்த கயிறுபோல் (கலித்தொகை. 110),(நிகண்டு.)
- மத்தவாரணம் - மத்தவாரணம் பிடிகளோடு வாரிதோய் கானி யாறும் (பாரத. அருச்சுனன்றவ)
- மதங்கயம் - மதிக்கு மதங்கய மனைய வரக்கன் (சேதுபு. பிரமகத். 7).
- மதமா - (பிங்கல நிகண்டு)
- மதவிருந்தம் - (யாழ். அக.)
- மதாரம் - (யாழ். அக.)
- மதாவளம் - (பிங்கல நிகண்டு)
- மதி - கோண் மதித்திடர் கிடந்தன(கம்பராமாயணம். நாக பாச. 136)
- மந்தமா - (சூடாமணி நிகண்டு)
- மந்திரம் - யானை வகைகளில் ஒன்று (சுக்கிரநீதி, 307.)
- மருண்மா - (திவாகர நிகண்டு)
- மறமலி - (திவாகர நிகண்டு)
- மா - அக. நி.
- மாதிரம் - (பிங்கல நிகண்டு)
- முத்துக்கொம்பன் - முத்து நிறமான தந்தமுள்ள யானை.
- மையன்மா - (இலக். அக.)
- மொய் - (பிங்கல நிகண்டு)
- யாளி - அக. நி.
- யானைத்தலைவன் - யானைக் கூட்டத்துள் தலைமைவகிக்கும் யானை. (மலைபடு. 297, உரை.)
- யானைமுகவன் - வீரபத்திரக் கடவுள், விநாயகக் கடவுள் (சூடாமணி நிகண்டு)
- யூதபம் - தன் கூட்டத்தைக் காக்குந் தலைவன் யானை. (பிங்கல நிகண்டு)
- வயமா - வயமாத் தானவாரியும் (கம்பராமாயணம். ஊர்தேடு. 17)
- வராங்கம் - (யாழ். அக.)
- வருணம் - (யாழ். அக.)
- வல்விலங்கு - (பிங்கல நிகண்டு)
- வழுவை - (சூடாமணி நிகண்டு)
- வியாளம் - கெட்டகுணமுள்ள யானை
- விராணி - (சங். அக.)
- வேதண்டம் - பொதி. நிக.
- அருணம் - அக. நி.
- அழுவை - அக. நி.
- அறுகு - பொதி. நிக.
- இமழி - அக. நி.
- உத்தரி - அக. நி.
- ஊர்வரை - பொன்னூர்வரைதனில் (சிவப். பிரபந். கோடீச்சுர. 241)
- ஏரம்பம் - (நாமதீப.)
- ஓர்கை - ஓர்கை யுரியான் (கடம்பர். உலா, 364)
- கரமை - (சங். அக.)
- களம் - கொம்பில்லா யானை
- கேழல் - அக. நி.
- சூர்ப்பகன்னம் - அக. நி.
- செயவானை - பட்டத்து யானை. (யாழ். அக.)
- அதிகடம்
- அரிணம்
- அருணம்
|
சான்றுகள் ---யானை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
(Elephant - tamil lexicon dictionary )