செயற்கை எரிவளி
Appearance
செயற்கை எரிவளி (செயற்கை எரிவாயு; Syngas) என்பது நீரியம், கார்பன் மோனாக்சைடு, மற்றும் சிறிதளவு கார்பன்-டை-ஆக்சைடு ஆகியவை கலந்த ஒரு எரிவளிக் கலவையாகும். இயற்கை எரிவளியின் மாற்றை உருவாக்கும் செயல்முறையில் ஓர் இடைப்பட்ட பொருளாகப் பயன்படும் ஒன்று. அதோடு அம்மோனியா, மெத்தனால் போன்றவற்றை உருவாக்கவும் பயன்படும் ஒன்று. இயற்கை எரிவளியின் ஆற்றல் அடர்த்தியில் ஒரு பாதி தான் இருக்கும் என்றாலும், இந்த எரிவளியை உள் எரிப்பு எந்திரங்களிலும் எரிபொருளாகப் பயன்படுத்தலாம்.[1][2][3]
செயற்கை எரிவளியை உருவாக்கும் வழிகள் சில:
- இயற்கை எரிவளி அல்லது நீர்ம நீரியக்கரிமங்களை நீராவிய மறுவாக்கம் செய்தல்.
- நிலக்கரியை வளியாக்கல்.
- உயிர்த்திரள்
- கழிவிலிருந்து மின்னாற்றல் ஆக்கும் வளியாக்க முறைகள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Speight, James G. (2002). Chemical and process design handbook. McGraw-Hill handbooks. New York, NY: McGraw-Hill. p. 566. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-07-137433-0.
- ↑ Beychok, M R (1975). Process and environmental technology for producing SNG and liquid fuels. Environmental Protection Agency. இணையக் கணினி நூலக மைய எண் 4435004117. OSTI 5364207.[page needed]
- ↑ "Syngas Cogeneration / Combined Heat & Power". Clarke Energy. Archived from the original on 27 August 2012. பார்க்கப்பட்ட நாள் 22 February 2016.