உள்ளடக்கத்துக்குச் செல்

சிகாகோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிகாகோ மாநகர்
சிகாகோ மாநகர்-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் சிகாகோ மாநகர்
சின்னம்
அடைபெயர்(கள்): காற்றாடும் மாநகர் (The Windy City), இரண்டாம் மாநகர் (The Second City), ஷி நகரம் (Chi Town), பெரிய தோள்களின் நகரம் (The City of Big Shoulders), நகரம் 312 (The 312)
குறிக்கோளுரை: "Urbs In Horto" (இலத்தீன்: பூங்காவிலுள்ள நகரம்), "I Will" (நான் செய்வேன்)
சிகாகோலாண்ட் மற்றும் இலினொயில் நகரின் அமைவிடம்
சிகாகோலாண்ட் மற்றும் இலினொயில் நகரின் அமைவிடம்
நாடுஐக்கிய அமெரிக்க நாடுகள்
மாநிலம்இலினொய்
குடியிருப்புப் பகுதிகள் (கவுண்டி)குக் கவுண்டி
நகராட்சிமார்ச் 4, 1837
அரசு
 • நகரத்தந்தைரிச்சர்ட் எம். டாலெ
ஏற்றம்
179 m (587 ft)
மக்கள்தொகை
 (2005)
 • நகரம்28,42,518
 • நகர்ப்புறம்
87,11,000
 • பெருநகர்
94,43,356
நேர வலயம்ஒசநே-6 (CST)
 • கோடை (பசேநே)ஒசநே-5 (CDT)
இணையதளம்egov.cityofchicago.org

சிகாகோ (Chicago, ஐபிஏ:ʃɪˈkɑːgoʊ) என்பது ஐக்கிய அமெரிக்காவின் இலினொய் மாநிலத்திலுள்ள ஒரு மாநகராகும். மத்திய-மேற்கு அமெரிக்க நிலப்பகுதியில் அமைந்திருக்கும் இந்நகர், வணிகம், தொழில், கலாச்சாரம் போன்ற அனைத்து துறைகளிலும் சிறப்புடன் விளங்குகிறது. இந்நகரில், இதன் வரலாற்று சிறப்பினால் அமெரிக்காவின் இரண்டாம் நகர் என்று வர்ணிக்கப்படுகிறது. மக்கள்தொகையில், நியூயார்க், லாஸ் ஏஞ்சலஸ் ஆகிய நகரங்களை அடுத்து, சுமார் 3 மில்லியன் மக்கள்தொகையுடன் அமெரிக்காவின் மூன்றாவது பெரிய நகராக விளங்குகிறது. சிகாகோ மாநகரை ஒட்டியுள்ள பெரும் புறநகர் பகுதி சிகாகோ நிலப்பரப்பு என்றே அழைக்கப்படுகிறது. இப்புறநகர் பகுதியில் சுமார் 9.7 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்[1].

இந்நகர் அமெரிக்காவின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான மிச்சிகன் ஏரியின் கரையில் அமைந்துள்ளது. உலகின் பெரிய 25 மாநகர்களில் ஒன்றான, இந்நகர்[2], 1833 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, 1837 இல் நகராக உயர்த்தபட்டது. அக்காலகட்டத்தில், அமெரிக்க உள்நாட்டுக் கப்பல் போக்குவரத்திற்கு பெரிதும் உபயோகப்படுத்தப்பட்ட அமெரிக்கப் பேரேரிகளுக்கும், மிசிசிப்பி ஆற்றிக்கும் இடையே அமைந்த, போக்குவரத்து மையமாக வளர்ந்தது. இதன்பிறகு, மிகக்குறுகிய காலகட்டத்திலேயே நாட்டின் மிகச்சிறந்த வணிக மையமாகவும், தொழில் நகராகவும், சுற்றுலாத்தலமாகவும் வளர்ச்சி கண்டது. இன்றைய காலத்தில், ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 44.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இம்மாநகருக்கு வருகை தருகின்றனர்[3].

சிகாகோ மாநகர் 1920-1930களில், உலகின் மிகக்கொடிய குற்றவாளிகளின் வாழ்விடமாகவும்(அல் கபுன்), ஊழல் அரசியல்வாதிகளின் கோட்டையாகவும் நோக்கப்பட்டது. சிகாகோ மாநகர் 1960-1970களில் இரயில்வே சார்ந்த கருவிகள் தயாரிக்கும் தொழிலில் முதன்மைபெற்று விளங்கியது.

வரலாறு

[தொகு]

சிகாகோ என்ற பதம் சீக்காக்கா என்ற மயாமி-இலினொய் மொழி பதத்திலிருந்து, காட்டு வெங்காயம் எனப் பொருள்படும். முதலில் இப்பகுதியில் குடியேறிய பிரான்சு நாட்டவர் பிரென்சு மொழியில் “சீக்காக்கா” என்ற சொல்லை திரித்து "சிகாகோ" கூறியதாக அறியப்படுகிறது[4][5]. சிகாகோ என்ற சொல் முதலில் இந்நகரில் நடுவே பாயும் ஆற்றை குறிக்கவே பயன்பட்டது. பின் அப்பெயரே அந்நகரின் பெயராகவும் ஆக்கப்பட்டது.

18ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை, போடோவாட்டமி இன பழங்குடியின்ரே இப்பகுதியில் வசித்து வந்தனர். இம்மக்கள், இப்பகுதியை மயாமி இன மக்களிடத்திலிருந்தும், மெசுவாக்கி இன மக்களிடத்திலிருந்தும் கைப்பற்றியிருந்தனர். சிகாகோ மாநகரில் முதன்முதலாக குடியேறிய பெருமை எயிட்டி நாட்டினரான ஜீன் பேப்டைஸ் போன்றி சாபில் என்ற ஆப்பிரிக்க-பிரெஞ்சு இனத்தவரை சாரும். இவர் 1770 ஆம் ஆண்டு, அந்நகருக்கு குடியேறி, பின், ஒரு போடோவாட்டமி இனப் பெண்ணை மணந்து, இப்பகுதியில் முதலாவது வாணிப சாலையை நிறுவினார்.

1803 ஆம் ஆண்டு அமெரிக்க இராணுவம் தனது டியர்பான் கோட்டையை கட்டியது. 1812 ஆம் ஆண்டு நடந்த டியர்பான் கோட்டை படுகொலையின்போது நடந்த போரின் முடிவில் டியர்பான் கோட்டை தகர்க்கப்பட்டது. பின் 1816 இல் அமெரிக்க அரசுக்கும், ஒட்டாவா, ஒச்பாவா, போடோவாட்டமி இன மக்களுக்குமிடையான செயின்ட் லூயிஸ் ஒப்பந்தத்தின் படி சிக்காகோ நிலப்பகுதி அமெரிக்க அரசின் கட்டுபாட்டுக்குள் வந்தது. 1833 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி கணக்கெடுப்பின்படி சிகாகோ நகரின் மக்கள்தொகை 350 ஆக இருந்தது.

சிகாகோ அமெரிக்காவின் கிழக்கு பகுதிக்கும் மேற்கு பகுதிக்கும் இடையான முக்கிய போக்குவரத்து மையமாக வளர்ந்தது. 1836 ஆம் ஆண்டு, சிகாகோ மாநகரின் முதலாவது தொடருந்து பாதையான சிகாகோ ஐக்கிய தொடருந்து பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, 1848 ஆம் ஆண்டு முதல் உபயோகப்படுத்தப்பட்டது. அதே ஆண்டு, இலினொய் - மிச்சிகன் கால்வாய் அமைப்புகளும் உபயோகத்திற்கு வந்தன. இக்கால்வாய் அமைப்பின் மூலம், அமெரிக்கப் பேரேரிகளுக்கும், மிசிசிப்பி ஆற்றிக்கும் இடையே கப்பல் போக்குவரத்து மேற்கொள்ள வழி பிறந்தது. நகரப் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்தமையால், நகர மக்கள்தொகை உயர்ந்தது. இந்நகரில் சிறந்து விளங்கிய தொழிற்சாலைகளாலும், சில்லறை வணிக துறையாலும் இநநகர அமெரிக்காவின் மத்திய-மேற்கு நகரங்களில் தலைசிறந்த நகரமாக வளர்ந்து, அமெரிக்க பொருளாதார வளர்ச்சியில் கணிசமான பங்கு வகித்தது.

முதல் நூறு ஆண்டுகளில் சிகாகோ மாநகர் அடைந்த வளர்ச்சி உலக நாடுகளை பிரமிப்பூட்டுவதாக இருந்தது. 1890 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, நாற்பது ஆண்டு காலத்தில், இந்நகரின் மக்கள்தொகை சுமார் 30,000 இருந்து 1 மில்லியனுக்கும் அதிகமானது. 19ம் நூற்றாண்டின் முடிவில், சிகாகோ மாநகர் உலகின் ஐந்தாவது மிகப்பெரிய நகரம் என்னும் பெருமையை பெற்றது[6][7].

பொருளாதார வளர்ச்சியில் முதன்மையாக இருந்தாலும், பல பெருநகர்களின் முக்கிய பிரச்சனையாக கருதப்படும் கழிவுநீர் வடிகால் வசதி சிக்காகோ நகரையும் பாதித்தது. சிக்காகோ நகரின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்யும், மிச்சிகன் ஏரியிலேயே அந்நகரின் கழிவு நீரும் பாய்ந்தமையால், நகர மக்களின் ஆரோக்கியம் கேள்விக்குரியதானது. இப்பிரச்சனை நிவிர்த்தி செய்யும் பொருட்டு, 1856 ஆம் ஆண்டு, சிக்காகோ நகரின் குடிநீர் குழாய்கள் ஏரியினுள் 3 மைல் தொலைவு கொண்டு செல்லப்பட்டன[8]. இதன்மூலம், நகரின் கழிவுநீர் கலக்காத குடிநீர் கிடைக்கப்பெறும் என எதிர்பார்ககப்பட்டது. இத்தீர்வு சிலகாலம் பயன் தந்தாலும், சிக்காகோ ஆற்றின் வெள்ள காலங்களில் பயன்தரவில்லை. சிக்காகோ ஆற்றின் பெருவெள்ளங்கள், கரைக்கு அருகாமையில் படிந்திருந்த சாக்கடையை குடிநீர் மொண்டு வரும் குழாய்களின் அருகே கொண்டு சென்றமையால் மீண்டும் மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டது. 1900 ஆம் ஆண்டு, இப்பிரச்சனையின் நிரந்தர தீர்வாக ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, சிக்காகோ நகரின் கழிவுநீரை மிச்சிகன் ஏரிக்கு கொண்டு செல்லும் இலினொய் ஆற்றின் திசையை எதிர்புறமாக திருப்பி, கழிவுநீரை பல கால்வாய்களின் மூலம், மிசிசிப்பி ஆற்றில் கலக்கப்பட்டது. ஆற்றின் போக்கை முழுவதுமாக எதிர்புறம் திருப்பும் இத்திட்டம், அந்நாள்களில் பொறியாளர்களுக்கு பெரும் சவாலாக குறிப்பிடபட்டது.

1871 பெருந்தீ விபத்து

1871 ஆம் ஆண்டு நிகழ்ந்த சிகாகோ மாநகர தீயின் விளைவாக நகரின் மூன்றில் ஒரு பகுதி தீக்கிரையானது. கிட்டத்தட்ட அனைத்து வணிகக் கட்டிடங்களும் எரிந்து சாம்பலாகின[9]. நகரை மீண்டும் நிறுவும் பணி துரிதமாக செயல் படுத்தப்பட்டது. உலகின் முதலாவதாக எஃகு தூண்களை கொண்டு உருவாக்கப்பட்ட பல வானளாவிய கட்டிடங்கள் உருவாக்கப்பட்டன.

1893 ஆம் ஆண்டு சிகாகோ மாநகரில் கொலம்பஸ் அமெரிக்க கண்டத்தை கண்டுபிடித்த 400வது ஆண்டு நிறைவை முன்னிட்டு உலக கொலம்பிய கண்காட்சி நிகழ்ந்தது. இன்றைய ஜாக்சன் பூங்காவில் நடந்த இக்கண்காட்சியை உலகம் முழுவதும் இருந்து வந்த சுமார் 27.5 மில்லியன் மக்கள் கண்டுகளித்தனர்[10].

1892 ஆம் ஆண்டு சிகாகோ பல்கலைக்கழகம் நகரின் தெற்கு பகுதியில் நிறுவப்பட்டது. சிகாகோ மாநகர் 1920-1930களில், உலகின் மிகக்கொடிய குற்றவாளிகளின் வாழ்விடமாகவும்(அல் கபுன்), ஊழல் அரசியல்வாதிகளின் கோட்டையாகவும் நோக்கப்பட்டது. மேலும் இக்காலகட்டத்தில் தொழில்வளம் பெருகியதால், ஆயிரக்கணக்கான ஆப்பிரிக்க–அமெரிக்கர் தெற்கு மாநிலங்களிலிருந்து குடியேறினர். இக்குடியேற்றத்தினால் பல்வேறு கலாச்சார மாற்றங்கள் நிகழ்ந்தன. ஜாஸ் இசையின் மையமாக சிக்காகோ நகர் கருதப்பட்டது[11].

1933 ஆம் ஆண்டு சிக்காகோ மாநகர முதன்மையர் ஆன்டனி செர்மாக் மயாமி நகரில் படுகொலை செய்யப்பட்டார்.

இரண்டாம் உலகப்போரின் போது யப்பான் நாட்டில் வீசப்பட்ட அணுகுண்டின் தொடக்கநிலை ஆராய்ச்சி நிலையமாக விளங்கிய சிகாகோ பல்கலைக்கழகத்தில் 1942 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் நாள் என்றிக்கோ பெர்மி தலைமையில் முதலாவது கட்டுப்படுத்தப்பட்ட அணுகரு விளைவு நிகழ்த்தப்பட்டது.

சிக்காகோவின் சியேர்ஸ் கோபுரம். 108 அடுக்கு மாடிகள் கொண்ட இக்கட்டிடம் 1974ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது.

1955 ஆம் ஆண்டு மாநகர முதன்மையராக ரிச்சர்ட் ஜே. டாலெ தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது ஆட்சிகாலத்தில் எற்பட்ட பல பொருளாதார மற்றும் சமுதாய மாற்றங்களினால், பெரும்பான்மையான நடுத்தர மற்றும் உயர்தர மக்கள் நகரத்தை விட்டு புறநகர் பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர். இவரது ஆட்சிகாலத்தில், பல முன்னேற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. சியேர்ஸ் கோபுரம், மெக்கொர்மிக் இடம், ஓ ஹார் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகியவை கட்டிமுடிக்கப்பட்டன. ரிச்சர்ட் ஜே. டாலெயின் மறைவுக்குபின் மைக்கேல் அந்தோனி பிலான்டிக் மாநகர முதன்மையராக பொறுப்பேற்றார்.

தற்போது சிகாகோ மாநகர முதன்மையராக மறைந்த ரிச்சர்ட் ஜே. டாலெயின் மகனான ரிச்சர்ட் எம். டாலெ பணியாற்றுகிறார். நகரில் ஏழை மக்களை கட்டாயத்தின் பெயரில் நகரை விட்டு இடம் பெயர்த்த மாநகர முதன்மையர், சில நல்ல முன்னேற்ற பணிகளையும் செய்து வருகிறார்.

புவியியல்

[தொகு]

அமைவிடம்

[தொகு]
சிகாகோ மாநகர் – குளிர்காலத்தில் வானிலிருந்து

சிகாகோ மாநகர், இலினொய் மாநிலத்தின் வடகிழக்கு பகுதியிலுள்ள மிச்சிகன் ஏரி யின், தென்மேற்கு முனையில் அமைந்துள்ளது. இந்நகரினூடே சிகாகோ ஆறு மற்றும் காலுமட் ஆறு ஆகிய இரண்டு ஆறுகள் ஓடுகின்றன. சிக்காகோ நகரின் தூய்மைபடுத்தப்பட்ட கழிவுநீரைக் கொண்டு செல்லும் சிகாகோ சுகாதார மற்றும் கப்பல் கால்வாய் சிகாகோ ஆற்றின் வழியே டேஸ் பிளையன்ஸ் ஆற்றைக் கலக்கிறது.

மிச்சிகன் ஏரி

[தொகு]
சோல்சர் ஃபியில்டு, சிக்காகோ

சிகாகோ மாநகரின் வரலாறும் பொருளாதாரமும் மிச்சிகன் ஏரியை மையமாக கொண்டே இயைந்தது[12]. முற்காலத்தில் சிகாகோ ஆறு சரக்கு கப்பல் போக்குவரத்துதளமாக உபயோகப்படுத்தப்பட்டாலும், இந்நாட்களில், சரக்கு கப்பல்களை கையாளுவதற்கு நகரின் தெற்கே அமைந்துள்ள சிகாகோ துறைமுகம் பயன்படுத்தப்படுகிறது. ஏரியின் அருகாமையில் அமைந்திருப்பதால், நகரின் காலநிலை, குளிர்காலத்தில் மிகக்குளிராகவும், கோடைகாலம் மிகவெப்பமாகவும் அமைகிறது.

சிகாகோ மாநகரின், ஏரிக்கரை சாலை மிச்சிகன் ஏரியையொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையின் அருகே ஏரிகரையில் பல அழகிய பூங்காகள் அமைந்துள்ளன. அவையாவன லிங்கன் பூங்கா, கிராண்ட் பூங்கா, பர்ன்காம் பூங்கா மற்றும் ஜாக்சன் பூங்கா. சுமார் 29 பொது மணல்வெளிகள் ஏரிகரைகளில் காணப்படுகின்றன. நகரின் முக்கிய பகுதிக்கு அருகே செயற்கையாக நீட்டப்பட்டுள்ள நிலப்பரப்பில், ஜோர்டைன் நீர் சுத்திகரிப்பு நிலையம், சுற்றுலா இடமான கப்பல் திண்டு, அருங்காட்சியக வளாகம், விளையாட்டு மைதானமான சோல்சர் ல்ட்டு, ஆகியவை அமைந்துள்ளன.

காலநிலை

[தொகு]

கோடைகாலம் மித வெப்பமாகவும், ஈரப்பதத்தை கொண்டதாகவும் காணப்படுகிறது. சராசரி வெப்பநிலை சுமார் 65 °F (18 °C) இருந்து 83 °F (28 °C) வரை பதிவு செய்யப்பட்டுள்ளது. குளிர்காலம் மிகக் குளிரானதாகவும், பனி விழும் காலமாகவும், பெரும்பான்மையான நீர்நிலைகள் உறையத் தக்கதாகவும் இருக்கிறது. வசந்த காலமும், இலையுதிர் காலமும் மிக இதமான காலநிலையை கொண்டுள்ளது. சிகாகோ மாநகரின் ஆண்டு மழையளவு சராசரியாக சுமார் 34 அங்குலம் ஆகும். கோடைகாலமே பெரும்பான்மையான மழை பெறுகிறது[13]. குளிர்காலத்தில் மழைக்கு பதிலாக பனி மூலம் நீர் கிடைக்கிறது. சிகாகோ மாநகர் மிகக்குளிரான ஆண்டாகப் பதிவுசெய்யப்பட்டுள்ள 1929-20 ஆண்டில், பனி வீழ்ச்சி சுமார் 114 அங்குலமாக இருந்தது.

 சிகாகோ மாநகர்  - தட்பவெப்பச் சராசரி
மாதம் ஜன பெப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ டிச ஆண்டு
உயர் சராசரி °F (°C) 32
(0)
35
(2)
46
(8)
59
(15)
70
(21)
81
(27)
85
(29)
83
(28)
76
(24)
64
(18)
48
(9)
36
(2)
60
(15)
தாழ் சராசரி °F (°C) 17
(-8)
21
(-6)
29
(-1)
40
(5)
50
(10)
60
(16)
66
(19)
65
(18)
56
(14)
45
(7)
33
(1)
22
(-5)
42
(6)
மழைவீழ்ச்சி inches (cm) 1.8
(4.9)
1.6
(4.0)
2.6
(7.0)
3.4
(8.9)
3.6
(9.2)
3.8
(10.2)
3.6
(9.5)
3.3
(8.8)
3.1
(8.0)
2.7
(7.0)
2.6
(6.9)
2.2
(5.7)
34.3
(90.2)
மூலம்: இலினொய் மாநில காலநிலை தகவல் [14] July 2007

நகர அமைப்பு

[தொகு]

கட்டிடக்கலை

[தொகு]
சிக்காகோ ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் கட்டிடங்கள்.
வடக்கு மிச்சிகன் அவென்யு பாலத்திலிருந்து – எதிரே தெரிவது விரிக்கிலி கட்டிடம், தூரத்தில் சான் ஃகன்காக் மையம்

1871 ஆம் ஆண்டில் நடந்த சிகாகோ மாநகர பெருந்தீ விபத்தின் காரணமாக நடைபெற்ற மறுகட்டமைப்பின் மூலம் கட்டடக்கலையில் சிக்காகோ நகர் மாபெரும் வளர்ச்சி கண்டது. இவ்வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது இந்நகருக்கு இடம்பெயர்ந்த அமெரிக்காவின் தலைசிறந்த கட்டடகலை வல்லுனர்களே.

1885 ஆம் ஆண்டு, முதலாவதாக எஃகு கொண்டு கட்டப்பட்ட வானளாவிய கட்டிடம் சிகாகோ மாநகரில் கட்டப்பட்டது. இன்று, சிகாகோ மாநகரின் வானளாவிய கட்டிடங்களின் தொகுதி உலகப்புகழ் பெற்றதாக விளங்குகிறது[15]. தற்காலத்தில் சியேர்ஸ் கோபுரம், Aon மையம் மற்றும் சான் ஃகன்காக் மையம் ஆகியவை உயரமான கட்டிடங்களாக விளங்குகின்றன[16]. இந்நகரின் ஏரிக்கரையின் அருகாமையில் உள்ள பல அடுக்குமாடி குடியிருப்புகள் நவின கட்டிடக்கலையின் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. நகரின் தெற்கு பகுதியில் பெரும்பான்மையான தொழில் துறை நிறுவனங்கள் தம் ஆலைகளை அமைத்துள்ளன. சிக்காகோ நகரில் பல புதிய வானளாவிய கட்டிடங்களை அமைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அவைகளில் முக்கியமானவைகளாக கருதப்படுவன: வாட்டர்வியூ கோபுரம், சிகாகோ ஸ்பயர், டிரம்ப் சர்வதேச விடுதி மற்றும் கோபுரம்.

பூங்காக்கள்

[தொகு]
மில்லியேனியம் பூங்கா

1837 ஆம் ஆண்டு சிகாகோ மாநகர் நிறுவப்பட்டபோது அதன் இலக்கு வாசகமாக அமைக்கப்பட்ட "Urbs in Horto" என்ற இலத்தின் மொழி வாக்கியம் “பூங்கா நகரம்” என்ற பொருள் தரும். இவ்வாக்கியத்தை மெய்பிக்கும் வகையில் சிக்காகோ மாநகரில் 552 பூங்காக்கள், சுமார் 7300 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர 33 ஏரி மணல்வெளிகள், ஒன்பது அருங்காட்சியகங்கள், 16 சரித்திர புகழ்பெற்ற ஏரிக்காயல்கள், 10 பறவை மற்றும் வனவிலங்கு காப்பகங்கள் ஆகியவை சிக்காகோ நகருக்கு பெருமை சேர்கின்றன. சிக்காகோவின் மிகப்பெரிய பூங்காவான லிங்கன் பூங்கா, ஆண்டுதோறும் சுமார் 20 மில்லியன் பார்வையாளர்களை கவர்திழுக்கிறது[17]. நகரின், பூங்கா மறுவடிமைப்பு மற்றும் அழகுபடுத்துதல் திட்டத்தின் மூலம் பூங்காக்கள் புது மெருகுடன் விளங்குவதுடன், பல புதிய பூங்காக்கள் உருவாக்கப்படுகின்றன. புதிய பூங்காக்களான பிங் டாம் நினைவு பூங்கா, டூசாபில் பூங்கா, மில்லியேனியம் பூங்கா ஆகியவை கண்டுகளிக்க கூடியவை.

சுற்றுலா

[தொகு]
கப்பல் திண்டு
ஃபியில்டு அருங்காட்சியகம் – ஆப்பிரிக்க யானைகளின் தத்துருபமான சிற்பம்
ஷெட் மீன் காட்சியகம் முகப்பு

ஆண்டுதோறும் சிகாகோ மாநகர் சுமார் 44.2 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.[3] பல உயர் தர வணிக மையங்கள், ஆயிரக்கணக்கான உணவகங்கள், கட்டடக்கலையின் சிறப்பை உணர்த்தும் வகையில் அமைந்துள்ள கட்டிடங்கள் ஆகியன சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கும் அமசங்களாக அமைகின்றன. சிக்காகோ நகர் அமெரிக்காவின் மூன்றாவது பெரிய சுற்றுலா மையமாக விளங்குகிறது[18].

செயற்கையாக சுமார் 3,000 அடி நீளத்தில் ஏரியினருகே கட்டப்பட்ட கப்பல் திண்டு (Navy Pier) பகுதியில் பல வணிக மையங்கள், உணவகங்கள், அருங்காட்சியகம் ஆகியவை அமைந்துள்ளன. மேலும், கப்பல் திண்டு பகுதியில் நிறுவப்பட்டுள்ள 150 அடி உயரமுள்ள ராட்டினம் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் அம்சம் ஆகும். கப்பல் திண்டு பகுதிக்கு வருடம்தோறும் 8 மில்லியன் மக்கள் வருகை தருகின்றனர்[19].

புதிய நூற்றாண்டை வரவேற்கும் குறிக்கோளுடன் கட்டப்பட்ட மில்லியேனியம் பூங்கா, பல அழகிய, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நீருற்றுகளை கொண்டுள்ளது. இங்கு குளிர்காலத்தில் பனி சரிக்கி வளையம் (ice ring) அமைக்கப்படுகிறது.

1998 ஆம் ஆண்டு இந்நகரின் அருங்காட்சியக வளாகம், 10 ஏக்கர் பரப்பில் ஏரிக்கரையில் திறந்து வைக்கப்பட்டது. இவ்வளாகத்தில் செயல்படும் ஆட்லர் கோளரங்கம், ஃபியில்டு அருங்காட்சியகம், மற்றும் ஷெட் மீன் காட்சியகம் ஆகியவை உலகப்புகழ் பெற்றவை. அருங்காட்சியகம வளாகம் தெற்கு பகுதியில் கிராண்ட் பூங்காவை இணைக்கிறது. இப்பூங்காவில் சிகாகோ கலை நிறுவனமும், பக்கிங்காம் வண்ண நீருற்றும் அமைக்கப்பட்டுள்ளன.

சிகாகோ பல்கலைக்கழகத்தின், ஒரியன்டல் நிலையத்தில் எகிப்திய நாகரிகத்தின் புராதன சின்னங்களின் மிகப்பெரிய தொகுப்பு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. இதை தவிர சிகாகோ வரலாற்று அருங்காட்சியகம், டுசெபில் ஆப்பிரிக்க-அமெரிக்கர் வரலாற்று அருங்காட்சியகம், சமகால கலை அருங்காட்சியகம், பெக்கி நோட்பேயட் இயற்கை அருங்காட்சியகம், போலந்திய அருங்காட்சியகம், அறிவியல் மற்றும் தொழில் அருங்காட்சியகம். ஆகிய பல்வேறு துறை சார்ந்த அருங்காட்சியகங்கள் சிக்காகோ நகரை ஒரு சிறந்த சுற்றுலா இடமாக ஆக்குகின்றன.

உணவு

[தொகு]
சிக்காகோ சுவை விழா
சிக்காகோ பாணியில் உருவாக்கப்படும் டீப் டிஷ் பீசா

சிகாகோ மாநகர் பல இனங்களை சார்ந்த மக்கள் ஒன்றாக வாழும் இடமாக திகழ்கிறது. என்வே, இந்நகரில் பல தலைசிறந்த இனஞ்சார்ந்த உணவகங்களை எங்கும் காணலாம். சிக்காகோ நகருக்கே உரிதான முறையில் உருவாக்கப்படும் பீஸா (Deep-Dish Pizza) என்ற உணவுப்பண்டம் அமெரிக்கா முழுவதும் மிகவும் பிரசித்தி பெற்றது. மற்றொரு சிறப்பான உணவாக கருதப்படும் சிக்காகோ – hot dog என்ற உணவுப்பண்டமும் இங்கு விரும்பி உண்ணப்படுகிறது[20]. இவை போன்ற தெரு பண்டங்கள் மட்டுமல்லாது, உலகப் புகழ்பெற்ற பல சமையல் கலைஞர்கள் பணியாற்றும் பல உயர்நிலை உணவகங்களும் இந்நகரில் உள்ளன. தற்போதய காலகட்டத்தில், சிக்காகோ நகர் அமெரிக்காவின் மிகச் சிறந்த உணவகங்கள் நிறைந்த நகராக உருவெடுத்துள்ளது.

பலவகையான உணவு வகைகளை ஒரே இடத்தில் சுவைத்து மகிழும் வண்ணம் வருடம்தோறும் இந்நகரில் உள்ள கிராண்ட் பூங்காவில் சிக்காகோ சுவை விழா நடத்தப்படுகிறது. இவ்விழாவில், சிக்காகோ நகரில் இருக்கும் நூற்றுக்கணக்கான உணவகங்கள், தம் உணவகத்தின் சிறப்பு உணவுகளை பார்வையாளர்கள் மிகக்குறைந்த விலையில் சுவைத்து மகிழுமாறு சாலைகளை அமைக்கின்றனர். இவ்விழா அமெரிக்க சுதந்திர விழாவை ஒட்டி நடைபெறுவதால், பார்வையாளகள், வகைவகையான உணவுடன், மாலைநேர வானவேடிக்கை நிகழ்ச்சியையும், பல்வேறு இசைநிகழ்ச்சிகளையும் கண்டுகளிக்கின்றனர்.

விளையாட்டு

[தொகு]
சிக்காகோ கப்ஸ் அணியின் சொந்த ஆடுகளம் - விர்கிளி ஃபியில்டு
சோல்சர் ஃபியில்டு

2006 ஆம் ஆண்டு, சிகாகோ மாநகர் அமெரிக்காவின் “சிறந்த விளையாட்டு நகரம்” என்று, ‘’’தி ஸ்போர்டிங் நியுஸ்’’’ (The Sporting News) என்ற பத்திரிகையால் பாராட்டப்பட்டது[21].

அமெரிக்காவில் மிகப்புகழ் பெற்ற அடிபந்தாட்ட அணிகளான சிக்காகோ கப்ஸ் (Chicago Cubs) மற்றும் சிக்காகோ வைட் சாக்ஸ் (Chicago White Sox) ஆகிய அணிகள் சிக்காகோ நகரை சார்ந்தவை. சிக்காகோ கப்ஸ் அணியின் சொந்த ஆடுகளம் நகரின் வட பகுதியில் உள்ள ரிக்லி ஃபீல்ட் (Wrigley Field) என்னும் மைதானம் ஆகும். சிக்காகோ வைட் சாக்ஸ் அணி கடந்த 2005 ஆம் ஆண்டு உலக அடிபந்தாட்ட தொடரை வென்றது. சிகாகோ பேர்ஸ் அணி சிக்காகோ நகரை சார்ந்த அமெரிக்கக் காற்பந்தாட்ட அணியாகும். இவ்வணி ஒன்பது முறை என்.எஃப்.எல் போட்டிகளில் சூப்பர் போல் என்ற பட்டத்தை வென்றுள்ளது. சிகாகோ பேர்ஸ் அணியின் சொந்த ஆடுகளம் நகரின் ஏரிக்கரையில் உள்ள சோல்ஜர் ஃபீல்ட் (Soldier Field) என்னும் மைதானம் ஆகும்.

அமெரிக்காவின் மற்றொரு முக்கிய விளையாட்டாக போற்றப்படும் கூடைபந்தாட்டத்தில் சிறந்து விளங்கும் சிகாகோ புல்ஸ் அணி இந்நகருக்கு பெருமை சேர்க்கிறது. உலகப்புகழ் பெற்ற கூடைபந்தாட்ட வீரரான மைக்கல் ஜார்டன் இவ்வணியை சார்ந்தவர். மைக்கல் ஜார்டன் இக்குழுவின் தலைவராக இருந்தபோது, ஆறு முறை இவ்வணியினர் பதக்கதை கைப்பற்றினர். சிக்காகோவின் பனி வளைதடிப் பந்தாட்ட அணியான சிகாகோ பிளாக்காக் (Chicago Blackhawks) மூன்று முறை ஸ்டான்லி கோப்பையை வென்று உள்ளது.

சிகாகோ மாநகர் மாராத்தான் போட்டிகள் 1977 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் நடைபெறுகிறது. உலக அளவில் நடத்தப்பெறும் மிகப்பெரிய ஐந்து மாராத்தான் போட்டிகளில் இதுவும் ஒன்று[22].

சிகாகோ மாநகர் 2016 ஆம் ஆண்டு நடைபெறும் கோடைகால ஒலிம்பிக் போட்டிகளை நடத்த விண்ணப்பித்துள்ளது[23][24]. 2008 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் நாள் அனைத்துலக ஒலிம்பிக் குழுவால் 2016-ஒலிம்பிக் போட்டி நடத்த தகுதியுள்ள நகரங்களாக அறிவிக்கப்பட்ட நான்கு உலக நகரங்களில் சிக்காகோ நகரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சர்வதேச ஒலிம்பிக் குழு சிக்காகோ நகரை பார்வையிட்டது. இதன் காரணமாக நகரின் பல பகுதிகள் வெகுவாக அலங்கரிக்கப்பட்டது.

ஊடகம்

[தொகு]
ஹார்போ கலைவினைக் கூடம் – புகழ்பெற்ற ஊடகர் ஓப்ரா வின்பிரே அவர்களின் தலைமையகம்

சிகாகோ மாநகர பகுதி அமெரிக்காவின் மூன்றாவது பெரிய ஊடக வசதிகளை கொண்ட நகரமாக விளங்குகிறது[25]. அமெரிக்காவின் நான்கு மிகப்பெரிய ஊடக தொழில் நிறுவனங்களாக கருதப்படும் சி.பி.எஸ் (CBS), ஏ. பி. சி (ABC), என். பி. சி (NBC) , மற்றும் பாக்ஸ் (FOX) ஆகிய நிறுவனங்கள் தங்கள் கிளைகளை சிக்காகோ நகரில் அமைத்துள்ளன. இதை தவிர நூற்றுகும் அதிகமான தொலைக்காட்சி சார்ந்த நிறுவனங்கள் இந்நகரில் செயல்படுகின்றன.

சிகாகோ டிரிபியுன்” (Chicago Tribune) மற்றும் சிகாகோ சன் டைம்ஸ் (Chicago Sun-Times) ஆகிய புகழ்பெற்ற நாளிதழ்கள் சிக்காகோ நகரில் இருந்து வெளிவருபவை. இவை தவிர பல இணைய நாளிதழ்களும் சிக்காகோ நகரில் வெளியிடப்படுகின்றன.

புகழ் பெற்ற பல ஹாலிவுட் திரைபடங்கள் சிக்காகோ நகரில் படமாக்கப்பட்டவை. ஸ்பைடர் மேன்-2 (spdeman-2) , பேட்மேன் பிகின்ஸ் (Batman Begins) ஆகிய பிரபல திரைபடங்களின் பெரும் பகுதி சிக்காகோ நகரில் படம் பிடிக்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றிபடமான டார்க் நைட் (The Dark Knight) திரைப்படமும் இந்நகரிலேயே படம் பிடிக்கப்பட்டது.

பொருளாதாரம்

[தொகு]
சிகாகோ வணிக வாரிய கட்டிடம்

சிகாகோ மாநகர் அமெரிக்காவின் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தை கொண்ட நகராகும். இந்நகரின் 2007ஆம் ஆண்டு மொத்த உற்பத்தி சுமார் 442 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்[26]. மேலும் மற்ற அமெரிக்க நகரங்களை போலல்லாது இந்நகரில் பலதரபட்ட தொழிகளும் சிறந்து விளங்குவதால், சமன்செய்யப்பட்ட பொருளாதாரமாக கருதப்படுகிறது.[27] மாஸ்டர்கார்ட் உலக வணிக குறியீட்டு எண்ணில் சிகாகோ மாநகர் நான்காவது முக்கிய வர்த்தக மையம் என வர்ணிக்கப்படுகிறது[28] [29][30].

நாட்டின் மிகப்பெரிய காப்புறுதி நிறுவனமான ஆல்ஸ்டேட் காப்புறுதி நிறுவனம் இந்நகரின் புறநகர் பகுதியில் அமைந்துள்ளது. இந்நகரில் புறநகர் பகுதிகளில் சுமார் 4.25 மில்லியன் பல்துறை தொழிலாளர் வசிப்பதால், அமெரிக்காவின் பெரிய தொழிலாளர் குடியிருப்பு பகுதியாக கருதப்படுகிறது[31] Chicago has the largest high-technology and information-technology industry employment in the United States.[32] சிகாகோ மாநகர் உயர் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களிலும், தகவல் தொழில்நுட்ப சார்ந்த தொழில்களிலும் முதன்மை பெற்று விளங்குகிறது[33].

பல மருத்துவ துறை சார்ந்த நிறுவனங்கள் சிக்காகோ நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படுபவை. உதாரணமாக பாக்ஸ்டர் இன்டர்நேசனல் நிறுவனம் (Baxter International), அப்பாட் லேப் (Abbott Laboratories) ஆகியவை சிக்காகோ நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படுபவை. தோசிபா மெடிக்கல் ரிசர்ச் (Toshiba medical research) , சிமன்ஸ் மெடிக்கல் (Siemens )), ஜெனரல் எலக்ரிக் மெடிக்கல் (GE medical) ஆகிய உலகப்பகழ் பெற்ற நிறுவனங்களும் தம் கிளைகளை சிக்காகோ நகரில் நிறுவியுள்ளன.

மக்கள் தொகையியல்

[தொகு]
மக்கள்தொகை வரலாறு [34]
வருடம் மக்கள்தொகை தரவரிசை விழுக்காடு ±
1840 4,470 92 --
1850 29,963 24 570.3 விழுக்காடு
1860 112,172 9 274.4 விழுக்காடு
1870 298,977 5 166.5 விழுக்காடு
1880 503,185 4 68.3 விழுக்காடு
1890 1,099,850 2 118.6 விழுக்காடு
1900 1,698,575 2 54.4 விழுக்காடு
1910 2,185,283 2 28.7 விழுக்காடு
1920 2,701,705 2 23.6 விழுக்காடு
1930 3,376,438 2 25.0 விழுக்காடு
1940 3,396,808 2 0.6 விழுக்காடு
1950 3,620,962 2 6.6 விழுக்காடு
1960 3,550,404 2 -1.9 விழுக்காடு
1970 3,366,957 2 -5.2 விழுக்காடு
1980 3,005,072 2 -10.7 விழுக்காடு
1990 2,783,726 3 -7.4 விழுக்காடு
2000 2,896,016 3 4.0 விழுக்காடு
2003 2,869,121 3 -0.9 விழுக்காடு
2006 2,873,790 3 0.2 விழுக்காடு

2006ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி சிக்காகோ நகரின் மக்கள்தொகை சுமார் 2,873,790.[35] 2000ஆம் ஆண்டு அமெரிக்க கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை 2,896,016 ஆகவும், வீடுகளின் எண்ணிக்கை 1,061,928 ஆகவும் இருந்தது. இலினொய் மாநிலத்தின் பாதிக்கும் மேலான மக்கள் சிக்காகோ நகரிலேயே வாழ்வதாக அறிய முடிகிறது. நாட்டின் மிக அதிகமான மக்களடர்த்தி கொண்ட நகரங்களில் ஒன்றான சிகாகோ மாநகரின் மக்களடர்த்தி சுமார் 12,750.3 மக்கள்/ சதுர கிலோமீட்டர். நகரத்தின் மக்கள்தொகையில் சுமார் 41.97 விழுக்காடு வெள்ளையர்களும், 36.77 விழுக்காடு ஆப்பிரிக்க –அமெரிக்கரும், 4.35 விழுக்காடு ஆசியரும், 0.06 விழுக்காடு பசிபிக் தீவுகளை சார்ந்தோரும், 0.36 விழுக்காடு அமெரிக்க பழங்குடியினரும், 13.58 விழுக்காடு மற்ற இனங்களை சார்ந்தோரும் வாழ்கின்றனர். சுமார் 21.72 விழுக்காடு மக்கள் பிற நாட்டில் பிறந்து இந்நாட்டில் குடியேறியவர்கள். இவர்களில், சுமார் 56.29 விழுக்காட்டினர் தென் அமெரிக்காவை சேர்ந்தவர்கள்.[36] மொத்த 1,061,928 வீடுகளில் சுமார் 28.9 விழுக்காடு வீடுகளில் 18 வயதுக்கும் குறைவான சிறுவர்-சிறுமியர் இருப்பதாகவும், 35.1 விழுக்காடு வீடுகளில் திருமணமான தம்பதியர் வாழ்வதாகவும், , 18.9 விழுக்காடு வீடுகளில் ஆண் துணை இல்லாத வாழ்வதாகவும், 40.4 விழுக்காடு மக்கள் குடும்ப உறவின்றி தனிமையில் வாழ்வதாகவும், கணகெடுப்பில் தெரிய வந்துள்ளது.

மக்கள்தொகை (வயது)
வயது விழுக்காடு
<18 26.2
18 – 24 11.2
25 -44 33.4
45 -64 18.9
>64 10.3

மக்களின் இடைநிலை வயது 32 ஆகவும், ஆண்-பெண் விகிதாச்சாரம் 100 பெண்களுக்கு 94.2 ஆண்கள் என்ற அளவிலும் இருந்து வருகிறது. மக்களின் குடும்ப இடைநிலை வருமானம் சுமார் $46,748 அமெரிக்க டாலர்கள். இந்நகர ஆண்களின் இடைநிலை வருமானம் சுமார் $35,907 ஆகவும், பெண்களின் வருமானம் சுமார் $30,536 ஆகவும் காணப்படுகிறது. மக்களின் தனிநபர் வருமானம் $20,175 ஆக இருக்கிறது. மொத்த மக்கள்தொகையில் 19.6 விழுக்காடு மக்கள் (16.6 விழுக்காடு குடும்பங்கள்) வறுமைகோட்டிற்கு கீழே வாழ்கின்றனர். வறுமைகோட்டிற்கு கீழே வாழும் மக்களில் 28.1 விழுக்காட்டினர் 18 வயதுக்கும் கீழேயும், 15.5 விழுக்காட்டினர் 65 வயதுக்கு மேலேயும் உள்ளனர் என்பது கவலைதரும் செய்தி. சிகாகோ மாநகரின் பெரிய வெள்ளையர் இனக்குழுவாக கருதப்படுவது போலந்தியராகும். போலந்து நாட்டிலிருந்து குடிபெயர்ந்த இம்மக்கள், நகரின் பொருளாதாரத்திலும், கலாச்சாரத்திலும் பெரும்பங்கு வகிக்கிறார்கள்.[37] மற்றுமொரு முக்கிய குடியேறிகளாக கருதப்படும் செர்மானியர், 1830–1840 ஆண்டுகளில் இந்நகரில் குடியேறினர் [38]

சிகாகோ மாநகரில் கணிசமான அளவில் வாழும் அயர்லாந்து-அமெரிக்கர், நகரின் தெற்கு பகுதியில் வாழ்கின்றனர். பல அரசியல் தலைவர்களை உருவாக்கிய பெருமை இச்சமுகத்தையே சாரும். தற்போதய மாநகர முதன்மையர் ரிச்சர்ட் எம். டாலெ ஒரு அயர்லாந்து-அமெரிக்கர். இதை தவிர சுமார் 500,000 இத்தாலிய-அமெரிக்கர் இந்நகரில் வாழ்கின்றனர்.[39] . ஐரோப்பிய இனங்கள் மட்டுமல்லாது, உலகின் பல்வேறு இனங்களை சார்ந்தோரும் இந்நகரில் வாழ்கின்றனர். நகரின் மேற்கு மற்றும் தெற்கு பகுதியில் பெரும்பாலும் ஆப்பிரிக்க அமெரிக்க. நியுயார்க் நகருக்கு அடுத்தபடியாக சிகாகோ மாநகரில் அதிக அளவில் ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தவர் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.[40]

ஆசிய இனத்தவரில் குறிப்பாக இந்தியரும், பாக்கிஸ்தானியரும் பெருமளவில் இந்நகரில் வாழ்கின்றனர். சிகாகோ மாநகர், அமெரிக்காவின் மூன்றாவது பெரிய இந்திய-அமெரிக்கர் வாழ்விடம் ஆகும். நகரின் வடக்கு திசையில் உள்ள திவான் அவென்யு, இந்திய மற்றும் பாக்கிஸ்தானியரின் வணிக சாலைகள் நிறைந்த உள்ள பகுதியாகும். இவ்வீதி, இந்திய நகரங்களில் உள்ள கடைவீதிகளை ஒத்துதிருப்பது வியப்பூட்டுகிறது.

கல்வி

[தொகு]
ஹரால்டு வாஷிங்டன் நூலகம்

இந்நகரில் சுமார் 680 பொதுபள்ளிகளும், 394 தனியார் பள்ளிகளும், 83 கல்லூரிகளும், 88 நூலகங்களும் உள்ளன.[41]

பொது பள்ளிகள்

[தொகு]
லிங்கன் பார்க் உயர்நிலைப் பள்ளி

சிகாகோ பொது பள்ளிகள் (CPS), பல பள்ளி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, நிருவகிக்கப்படுகிறது. சுமார் 600 கும் மேற்பட்ட ஆரம்ப மற்றும் உயர்நிலை பள்ளிகளில், 400,000 மாணாக்கர் கல்வி பயில்கின்றனர்.[42]

தனியார் பள்ளிகள்

[தொகு]

பெரும்பான்மையான தனியார் பள்ளிகள் கிறித்தவ மதத்தை சார்ந்த அமைப்புகளினால் ஆளுகை செய்யப்படுகிறது. ரோமன் கத்தோலிக்க திருச்சபையினாலும், லூத்திரன் திருச்சபையினாலும் [43], ஜேசுட் திருச்சபையினாலும், ஆளுகை செய்யப்படும் இப்பள்ளிகள் மக்களின் நன்மதிப்பை பெற்றவை. இவைதவிர, மதச்சார்பற்ற பல தனியார் பள்ளிகளும் இந்நகரில் உள்ளன. அவையாவன:

கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்கள்

[தொகு]
சிகாகோ பல்கலைக்கழகம்

1890 ஆம் ஆண்டு முதலே சிகாகோ மாநகர் உயர் கல்வியில் ஒரு சிறப்பான நிலையை கொண்டுள்ளது. இந்நகரின் அருகாமையில் அமைந்திருக்கும் மூன்று பல்கலைகழகங்களான வட மேற்கு பல்கலைகழகம் , டிப்பால் பல்கலைகழகம் , மற்றும் சிகாகோ பல்கலைக்கழகம், ஆகியவை உயர்கல்வியிலும், உயர் தொழில்நுட்ப ஆராய்ட்சியிலும் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. உலகப்புகழ் பெற்ற சிகாகோ பல்கலைக்கழகத்தை சார்ந்த பேராசிரியர்களும், அறிவியலாளர்களும், இந்நாள் வரை 81 நோபல் பரிசுகளை வென்றுள்ளது இப்பல்கலைகழகத்தின் பெருமையை விளக்கும் சான்றாகும்.

போக்குவரத்து

[தொகு]
CTA Brown Line
Union Station
O'Hare International விமான நிலையம் Terminal 1 – Concourse B
Metra train at Ogilvie போக்குவரத்து ation மையம்
சிகாகோ மாநகர் Yellow Cab

அமெரிக்காவில் சிகாகோ மாநகர் ஒரு முக்கிய போக்குவரத்து மையமாக விளங்குகிறது. அமெரிக்காவின் வடபகுதியில் அமைந்துள்ள ஆறு பெரிய இரயில் பாதைகள் இணையும் ஒரே இடமாக சிக்காகோ நகர் இருப்பதினால், இந்நகரை சரக்கு போக்குவரத்து மையம் என்று அழைத்தால் அது மிகையாகாது.[44] அது மட்டுமன்றி, சிகாகோ மாநகர் பயணிகள் போக்குவரத்திலும் பெரும் பங்கு வகிக்கிறது. பல தொலை தூர ஆம்டிராக்(Amtrak) இரயில்கள் சிகாகோ நகரின் யுனியன் ஸ்டேசன் இரயில் நிலையத்தில் இருந்து தினமும் புறப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "அமெரிக்க நகர மக்கள்தொகை கணக்கியல் புள்ளிவிபரம்". அமெரிக்க மக்கள்தொகை கணக்கியல் அலுவலகம். 30 டிசம்பர் 2003. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. "உலக நகரங்களில் சிக்காகோ". உலகமயமாக்கல் மற்றும் உலக நகரங்கள் ஆய்வு.
  3. 3.0 3.1 சிக்காகோ சுற்றுலா மையம் –புள்ளிவிபரம்
  4. ஸ்வென்சன், ஜான் .எப்., “சிக்காகுவா/சிக்காகோ பத மூலம், சொற்தோற்றம், இடம்” 'இலினொய் வரலாற்று சஞ்சிகை” 84.4 (Winter 1991): 235–248
  5. மெக்காப்ரி, மைக்கல். "சிக்காகோ சொற்தோற்றம். [http://linguistlist.org/ LINGUIST list posting, Dec. y21, 2001
  6. "முதல் பத்து பெரிய நகரங்கள் 1900". Archived from the original on 2005-09-20. பார்க்கப்பட்ட நாள் 2008-09-19.
  7. "சிக்காகோ நகரின் துரித வளர்ச்சி 1850–1990". சிக்காகோ பல்கலைகழகம். Archived from the original on 2012-12-11. பார்க்கப்பட்ட நாள் 2007-08-19.
  8. "சிக்காகோ டிரிபுன் நாளிதழ் பிப்ரவரி 14, 1856". Archived from the original on 2013-07-31. பார்க்கப்பட்ட நாள் 2008-09-19.
  9. ராபர்ட் (2004–2005). சிக்காகோ நகர மறுகட்டமைப்பு பணிகள். சிக்காகோ கலைக்களஞ்சியம்.
  10. Chicago History. சிக்காகோ சுற்றுலாத்துறை .
  11. "ஜாஸ் இசை – சிக்காகோ". The Red Hot Archive. Archived from the original on 2017-11-21. பார்க்கப்பட்ட நாள் 2007-10-29.
  12. "முற்காலத்தில் சிக்காகோ". பார்க்கப்பட்ட நாள் 2008-09-19. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  13. Chicago Seasonal Temperature and Precipitation Rankings (11/25/2005). தேசிய வானிலை சேவை அலுவலகம் சிக்காகோ மாநகர்.
  14. "மாதாந்திர சராசரி வானிலை அளவுகள் சிக்காகோ மிட்வே விமானநிலையம்". Archived from the original on 2007-07-13. பார்க்கப்பட்ட நாள் 2008-09-19. {{cite web}}: Unknown parameter |accessmonthday= ignored (help); Unknown parameter |accessyear= ignored (help)
  15. Chicago (2004). சிக்காகோ பொது நூலகம் .
  16. உலகின் உயரமான கட்டிடங்கள்
  17. "சிக்காகோ நகர பூங்காக்கள் –உண்மைத்தகவல்கள்". Archived from the original on 2011-03-15. பார்க்கப்பட்ட நாள் 2006-07-19.
  18. "அமெரிக்காவின் மூன்றாவது பெரிய சுற்றுலா மையமாக சிக்காகோ". 11 September 2003.
  19. "கப்பல்திண்டு". கப்பல்திண்டு சுற்றுலா தகவல் மையம். 2007. Archived from the original on 2014-11-22. பார்க்கப்பட்ட நாள் 2008-09-19.
  20. "சிக்காகோ நகரின் தெருப்பண்டம் – ஹாட் டாக் (Hot Dog)". Emril Lagasse. 1999. Archived from the original on 2003-04-15. பார்க்கப்பட்ட நாள் 2007-09-03.
  21. "சிறந்த விளையாட்டு நகரங்கள் 2006". ஸ்போர்டிங் நியுஸ். ஆகஸ்டு 1 2006. Archived from the original on 2008-03-24. பார்க்கப்பட்ட நாள் 2008-09-19. {{cite web}}: Check date values in: |date= (help)
  22. "உலக மாராத்தான் போட்டிகள் –சிக்காகோ" (PDF). லாசாலே வங்கி மராத்தான். Archived (PDF) from the original on 2006-10-20. பார்க்கப்பட்ட நாள் 2007-07-25.
  23. Levine, Jay. "[https://web.archive.org/web/20061110061832/http://cbs2chicago.com/local/local_story_207062131.html பரணிடப்பட்டது 2006-11-10 at the வந்தவழி இயந்திரம் சிக்காகோவில் அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் நடக்க வாய்ப்பு " சிபிஎஸ். July 26, 2006. Retrieved on December 1, 2006.
  24. "சிக்காகோ ஒலிம்பிக் 2016 வலையகம்." Retrieved on December 1, 2006.
  25. சிக்காகோ ஊடகம் பரணிடப்பட்டது 2006-05-17 at the வந்தவழி இயந்திரம்.
  26. (13 January 2006) "சிக்காகோ பொருளாதாரம்"(PDF). The Role of Metro Areas in the U.S. Economy, p. 15, Washington, D.C.:United States Conference of Mayors. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2009-04-11. பார்க்கப்பட்ட நாள் 2008-09-19.
  27. சமன்செய்யப்பட்ட பொருளாதாரம்PDF. Accessed from 'World Business Chicago'.
  28. "London named world's top business center by MasterCard", CNN, June 13, 2007.
  29. Ron Starner. "'வாழ்வின் உச்சத்தில் '". siteselection.com. பார்க்கப்பட்ட நாள் 2008-03-11.
  30. "செல்வம் கொழிக்கும் நகரம்". {{cite web}}: Unknown parameter |accessmonthday= ignored (help)
  31. Chicago Market Outlook 2006 – Market CommentaryPDF (805 KiB). CBRE – CB Richard Ellis.
  32. Gauging Metropolitan "High-Tech" and "I-Tech" Activity (2004) பரணிடப்பட்டது 2008-03-25 at the வந்தவழி இயந்திரம். Accessed from 'SAGE Publications'.
  33. உயர் தொழில்நுட்ப தொழில்கள் தரநிர்ணயம் (2004) பரணிடப்பட்டது 2008-03-25 at the வந்தவழி இயந்திரம். Accessed from 'SAGE Publications'.
  34. Gibson, Campbell (June 1998). Population of the 100 Largest Cities and Other Urban Places in the United States: 1790 to 1990. U.S. Bureau of the Census – Population Division.
  35. வாழ்வதற்கு சிறந்த இடங்கள் 2006: சிகாகோ மாநகர் , IL snapshot. CNN Money.
  36. "Census 2000 Demographic Profile: Chicago". Archived from the original on 2020-02-12. பார்க்கப்பட்ட நாள் 2008-09-19. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  37. chicago America the diverse – Chicago’s Polish neighborhoods (5/15/2005)USA Weekend Magazine.
  38. செர்மானிய குடியேற்றம்
  39. "இத்தாலிய-அமெரிக்கர் ".
  40. Report to Congress – October 1, 2000 Chicago Region, U.S. Census Monitoring Board.
  41. "சிக்காகோ கல்வி". Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2008-09-19.
  42. CPS At A Glance (2005) பரணிடப்பட்டது 2008-09-15 at the வந்தவழி இயந்திரம் சிக்காகோ பொது பாடசாலைகள் at www.cps.k12.il.us/AtAGlance.html.
  43. Pogorzelski, Daniel and Maloof, John: Portage Park, Arcadia Press, 2008, p. 58
  44. சிகாகோ சரக்கு போக்குவரத்து. Assessing the Effects of Freight Movement on Air Quality at the National and பகுதிal Level. U.S. Department of போக்குவரத்து ation – Federal Highway Administration (April 2005).

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிகாகோ&oldid=3731856" இலிருந்து மீள்விக்கப்பட்டது
pFad - Phonifier reborn

Pfad - The Proxy pFad of © 2024 Garber Painting. All rights reserved.

Note: This service is not intended for secure transactions such as banking, social media, email, or purchasing. Use at your own risk. We assume no liability whatsoever for broken pages.


Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy