உள்ளடக்கத்துக்குச் செல்

எட்வின் ஹபிள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எட்வின் ஹபிள்
பிறப்புஎட்வின் பாவெல் ஹபிள்

(1889-11-20)நவம்பர் 20, 1889
மார்சுபீல்டு, மிசோரி, ஐக்கிய அமெரிக்கா
இறப்புசெப்டம்பர் 28, 1953(1953-09-28) (அகவை 63)
சான் மரீனோ, கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள்
வாழிடம்அமெரிக்க ஐக்கிய நாடு
தேசியம்அமெரிக்கர்
துறைவானியல்
பணியிடங்கள்சிக்காகோ பல்கலைக்கழகம்
மவுன்ட் வில்சன் பார்வையரங்கம்
கல்வி கற்ற இடங்கள்சிக்காகோ பல்கலைக்கழகம்
ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்
அறியப்படுவதுஹபிள் தொடர்
பின்பற்றுவோர்ஆலன் சான்டேஜ்
விருதுகள்நியூகோம்ப் பரிசு 1924
புரூஸ் பதக்கம் 1938
பிராங்கிளின் பதக்கம் 1939
ராயல் வானியல் குழுவின் தங்க பதக்கம் 1940
லீஜியன் ஆஃப் மெரிட் 1946
கையொப்பம்

எட்வின் பாவெல் ஹபிள் எனும் முழுப்பெயர் கொண்ட எட்வின் ஹபிள் (Edwin Hubble, நவம்பர் 20, 1889 – செப்டெம்பர் 28, 1953) ஒரு புகழ் பெற்ற வானியலாளர் ஆவார். இவரது தந்தையார் மிசோரியில் உள்ள மாஷ்ஃபீல்ட் என்னுமிடத்தில் ஒரு காப்புறுதித் துறை அலுவலராக இருந்தார். 1898 ஆம் ஆண்டில் இவரது குடும்பம் இல்லினோய்சில் உள்ள வீட்டனுக்கு இடம் பெயர்ந்தது. எட்வின் ஹபிள் இளமைக் காலத்தில் சிறந்த விளையாட்டு வீரராகத் திகழ்ந்தார். அக்காலத்தில் இவர் கல்வித் திறமையிலும் பார்க்க விளையாட்டுத் திறமைக்காகவே பெயர் பெற்றிருந்தார்.

இவர் சிக்காகோ பல்கலைக் கழகத்தில், கணிதம், வானியல் என்பவற்றைக் கற்று 1910 இல் இளநிலைப் பட்டம் பெற்றார். ஒக்ஸ்ஃபோட்டில் முதுநிலைப் பட்டம் பெற்றபின்னர் அமெரிக்காவுக்குத் திரும்பினார். ஆரம்பத்தில் இவர் இந்தியானாவின் நியூ அல்பனியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராகவும், கூடைப்பந்துப் பயிற்சியாளராகவும் பணிபுரிந்தார். அத்துடன் கெண்ட்டகியில் சட்டத் தொழிலும் செய்து வந்தார். முதலாம் உலகப் போரில் இராணுவ சேவையில் சேர்ந்த இவர் விரைவில் மேஜர் தரத்துக்கு உயர்ந்தார். இப்பணியின் பின்னர் வானியல் துறைக்குத் திரும்பிய இவர், சிக்காகோ பல்கலைக் கழகத்தின் யேர்க்ஸ் வானாய்வு நிலையத்தில் சேர்ந்தார். அங்கே 1917 ஆம் ஆண்டில், இவர் முனைவர் பட்டமும் பெற்றுக்கொண்டார். இவர் எழுதிய ஹபிள் விதி அண்டம் விரிந்துகொண்டே இருக்கின்றது என்று கூறுகிறது.[1]

நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் இணைந்து எட்வின் ஹபிள் நினைவாக ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியை ஏப்ரல் 24, 1990இல் அனுப்பியது.[2][3][4][5]

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hubble, Edwin (1929). "A relation between distance and radial velocity among extra-galactic nebulae". PNAS 15 (3): 168–173. doi:10.1073/pnas.15.3.168. பப்மெட்:16577160. பப்மெட் சென்ட்ரல்:522427. Bibcode: 1929PNAS...15..168H. http://www.pnas.org/cgi/reprint/15/3/168. பார்த்த நாள்: 2017-03-22. 
  2. ஹபிள் விண் தொலைநோக்கி இயங்கி 25 ஆண்டுகள் – படத்தொகுப்பு
  3. Hubble, Edwin (December 1926). "Extragalactic nebulae". Astrophysical Journal 64 (64): 321–369. doi:10.1086/143018. Bibcode: 1926ApJ....64..321H. http://adsabs.harvard.edu/abs/1926ApJ....64..321H. 
  4. Slipher, V.M. (1917). Proc. Am. Philos. Soc.. 56. பக். 404–409. 
  5. Segal, I.E. (December 1993). Proc. Natl. Acad. Sci. USA. 90. பக். 11114–11116. 

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்வின்_ஹபிள்&oldid=3845375" இலிருந்து மீள்விக்கப்பட்டது
pFad - Phonifier reborn

Pfad - The Proxy pFad of © 2024 Garber Painting. All rights reserved.

Note: This service is not intended for secure transactions such as banking, social media, email, or purchasing. Use at your own risk. We assume no liability whatsoever for broken pages.


Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy